Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – நாமக்கல்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி - நாமக்கல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – நாமக்கல்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – நாமக்கல்

‘டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச, ‘டெஸ்ட் பேட்ச்’ பயிற்சி வகுப்பில், விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது’ என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு, இலவச, ‘டெஸ்ட் பேட்ச்’ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டப்படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று முன்தினம் முதல் நடக்கிறது.தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2023ல் வெளியான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர்.

டி.என்.யு.எஸ்.ஆர்.பி., – எஸ்.ஐ., தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர். டி.என்.யு.எஸ்.ஆர்.பி., போலீஸ் தேர்வில், 17 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், நடப்பாண்டில் வெளியான, எஸ்.ஐ., தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது வந்துள்ள குரூப்-2 முதன்மை தேர்வில், 9 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகி உள்ளனர்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணிலோ, onlineclassnkl@gmail.com onlineclassnkl@gmail.com என்ற இணையதளத்திலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு, பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×