Home News latest news சென்னை ஐஐடியில் பி இ, பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு செமிகண்டக்டர் பயிற்சி, வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு

சென்னை ஐஐடியில் பி இ, பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு செமிகண்டக்டர் பயிற்சி, வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு

0

சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜீஸ் ஃபவுண்டேஷன், ஸ்வயம் பிளஸ் அமைப்பு இணைந்து பொறியியல், அறிவியல் பட்டதாரிகளுக்கு புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளன.

இந்த 11 நாள் பயிற்சியில் செமிகண்டக்டர் தொழில் குறித்து கற்றுத் தரப்படும். சிறந்த முறையில் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். முதல்கட்ட பயிற்சி அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் அறிவியல், பொறியியல் பட்டதாரிகள் https://iitmpravartak.org.in/advanced_electronic_mfg என்ற இணையதளம் மூலம் அக்டோபர் 3-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ.15 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி. ஐஐடி வளாகத்திலேயே தங்கியும் பயிற்சி பெறலாம். உணவு, விடுதி வசதிக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.650. இதுபற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version