Tuesday, September 2, 2025
HomeBlogபள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனடைவு தேர்வு - புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனடைவு தேர்வு – புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனடைவு தேர்வுபுதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் கற்றல்
அடைவு திறனை கண்டறியும், தேசிய திறனடைவு தேர்வு
நேற்று நடந்தது.

பள்ளி
மாணவர்களின் கற்றல் அடைவுகளை
மதிப்பிடுவதற்காக, மத்திய
அரசின் கல்வி அமைச்சகம்,
ஒரு குறிப்பிட்ட கால
இடைவெளிகளில், அனைத்து
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே ஒரு தேசிய திறனடைவு
கணக்கெடுப்பை (Survey) நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு தேர்வு
நடந்தது.

இதில்,
3, 5, 8
மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்கள் பங்கேற்றனர்.மத்திய
கல்வி அமைச்சகம், Survey நடத்தும் வழிமுறைகள், பள்ளிகளின் பட்டியலை ஏற்கனவே
தேர்வு செய்து வழங்கி
உள்ளது.

அதன்படி
புதுச்சேரியில் 155, காரைக்காலில் 101, மாகியில் 28, ஏனாமில்
29
அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் நேற்று சர்வே
தேர்வு நடந்தது.இத்தேர்வில் மாணவர்கள் தற்போது பயிலும்
3, 5, 8
மற்றும் 10ம் வகுப்பில்,
அந்த வயதிற்கான கற்றல்
அடைவு அடைந்துள்ளனரா என்பதை
சோதிக்கும் வகையில் கேள்விகள்
அடங்கிய வினாக்கள் வழங்கப்பட்டது.

மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் தொடர்பான
கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.
10
ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த சர்வே தேர்வில்,
ஆறு பேரில் ஒருவருக்கு, மொழி பாடமான தமிழ்
மொழி தொடர்பான கேள்விகளுக்கு பதில், இந்தி தொடர்பான
கேள்விகள் இடம்பெற்று இருந்தது.

இதனால்
அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மொழி தெரியாமல்
திகைத்தனர். இந்தி கேள்விகளை
தவிர்த்துவிட்டு மற்ற
கேள்விகளுக்கு மட்டும்
பதில் அளித்தனர்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
நேற்றைய தேர்வில் ஏறத்தாழ
8000
மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில்,
10
ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தேர்வில்,
ஆறு பேரில் ஒருவருக்கு இந்தி மொழி குறித்த
கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.
இது மாணவர்களின் திறன்அடைவு தொடர்பான சோதனை தேர்வு
மட்டுமே. மதிப்பெண்கள் ஏதும்
கிடையாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments