Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

RTO ஆபிஸ் போகாமல் உங்கள் பழைய லைசென்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

RTO ஆபிஸ் போகாமல் உங்கள் பழைய லைசென்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

ஆர்டிஓ ஆபிஸுக்கே போகாமலேயே வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸ், பெறுவது எப்படி தெரியுமா? அந்த லைசென்ஸை ஆன்லைனிலேயே புதுப்பிப்பது எப்படி தெரியுமா?

கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.. அப்போது துறை வாரியாக நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்றுதான், ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கும் வகையில், ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் வாங்கி கொள்வது.

வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம் என்று அறிவிப்பு வெளியானாலும்கூட, டிரைவிங் லைசென்ஸை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளும் அறிவிப்பானது மக்களை ஈர்த்திருந்தது.

விண்ணப்பதாரர்கள்: அதாவது, 2022-23ம் ஆண்டில் (பிப்ரவரி 2023 வரை) மட்டும் 6.61 லட்சம் புதிய டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் கார்டை ஆவணமாக வைத்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது விருப்பமான இடத்திலிருந்தோ பழகுநர் உரிமம் (LLr) தேர்வினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமலே மேற்கொள்ளலாம்.

40 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழைப் பெற்று உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் இல்லாத விண்ணப்பதாரர், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பழகுநர் உரிமம் (LLr) தேர்விற்காக நேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

வெப்சைட்கள்: பழகுநர் உரிமத்தை பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இவைகளை தவிர, மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவுக்கான விண்ணப்பம் நகல், பதிவு சான்றிதலுக்கான விண்ணப்பம், ஆர்சிக்கு என்ஓசி வழங்குதல், ஆர்சியில் அட்ரஸ் மாற்றம், புதிய அனுமதி வழங்கல், நகல் அனுமதி மற்றும் பரிமாற்றம் ஆகியவை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஹேப்பி: இதுபோன்ற வசதிகளால், இனி தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்… அல்லது முகவர்களின் செல்வாக்கையும் குறைப்பதோடு லஞ்சத்தையும் குறைக்கும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்… இந்த டிஜிட்டல் சேவையால், புரோக்கர்கள், ஏஜெண்ட்களின் தலையீடுகள் இனி குறையும் என்று கூறப்படுவது பொதுமக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்துவருகிறது.

லைசென்ஸ் ஆன்லைனில் எப்படி புதுப்பிப்பது:

  • முதலில், https://parivahan.gov.in/parivahan/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பிறக, “ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் மாநிலம் மற்றும் ‘உரிமச் சேவைகள்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • DL-ன் புதுப்பித்தல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு “ஆம்” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு CAPTCHA- குறியீட்டை சரியாக கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • அடுத்து, உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும்.. பிறகு, உங்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை அப்டேட் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பழைய DL ஐ பதிவேற்ற வேண்டும்.
  • பின்பு, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படும். கட்டணம் செலுத்திய ரசீதை, பத்திரமாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  •  இப்போது, அடுத்த சில நாட்களில், புது Driving Licence, நீங்கள் பதிவிட்ட முகவரியில் தபால் மூலம் கிடைக்கப்பெறுவீர்கள்

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]