Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

எம் ஜி ஆர் திரைப்படம் – தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

எம் ஜி ஆர் திரைப்படம் - தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
எம் ஜி ஆர் திரைப்படம் – தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

எம் ஜி ஆர் திரைப்படம் – தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் வரும் கல்வியாண்டில் 6 வகையான பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, விஷுவல் ஆா்ட்ஸ், இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெஃக்ட்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை முதல் மே 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வா், தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை மே 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment