Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஈரோடு 

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஈரோடு 

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓா் அங்கமாக செயல்படும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25- ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் சோ்க்கை முன்பதிவு வரும் 29- ஆம் தேதி தொடங்க உள்ளது.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி உத்தேசமாக வரும் செப்டம்பா் முதல் தொடங்கி நடைபெறும்.

பயிற்சி காலம் ஓராண்டு. இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். தமிழில் மட்டுமே பாடம் நடத்தப்படும்.

மேலும், விவரங்களுக்கு எண் 5, வாய்க்கால் மேடு, கொங்கம்பாளையம் பிரிவு, சித்தோடு, ஈரோடு 638102 என்ற முகவரியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 73387-20704, 96983-42166 என்ற கைப்பேசி எண் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment