நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 2 (1.0 சிலப்பதிகாரம்) ஒரு வரி வினா விடைகள்
- நிலவின் குளிர்ச்சியையும், கதிரவனின் வெம்மையும், மலையின் பயனையும் போற்றும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
- அத்தி மலர் மாலையை அணிந்த மன்னர் யார்?
சோழ மன்னன்
- காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் யார்?
சோழ மன்னன்
5. பொருள் தருக:
திங்கள் – நிலவு
கொங்கு – மகரந்தம்
அலர் – மலர்தல்
திகிரி – ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்
மேரு – இமயமலை
நாமநீர் – அச்சம் தரும் கடல்
அளி – கருணை
- இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?
சோ
- இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
கி.பி இரண்டு
- சிலப்பதிகாரம் _ காப்பியங்களுள் ஒன்று
ஐம்பெரும் காப்பியம்
- சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கபடுகிறது?
முதல் காப்பியம்
முத்தமிழ் காப்பியம்
குடிமக்கள் காப்பியம்
- இரட்டை காப்பியம் என அழைக்கப்படும் நூல்கள் எவை?
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
- திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது?
சிலப்பதிகாரம்
- இளங்கோவடிகள் பெற்றோர்?
தந்தை: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய்: நற்சோனை
- இளங்கோவடிகளின் தமையன்?
சேரன் செங்குட்டுவன்
- கழுத்தில் சூடுவது _
தார்
- கதிரவனின் மற்றொரு பெயர் _
ஞாயிறு
- வெண்குடை பிரித்து எழுதுக
வெண்மை+குடை
- பொற்கோட்டு-பிரித்து எழுதுக
பொன்+கோட்டு
- கொங்கு அலர் -சேர்த்து எழுதுக
கொங்கலர்
- அவன்+அளிபோல் – சேர்த்து எழுதுக
அவனளிபோல்
- “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow