Join Whatsapp Group

Join Telegram Group

12th Tamil – Lesson 5 – நாடென்ப நாட்டின் தலை – New Book Back Question & Answers

By admin

Updated on:

 

download2Bbutton 4 Tamil Mixer Education

இலக்கணத் தேர்ச்சி கொள்

 1. படிமம்
என்பதன் பொருள்

)
சொல்

)
காட்சி

)
செயல்

)
ஒலி

விடை: ) காட்சி

 

2.காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளி வரும் புதுவையில்


இக்கவிதையில் . .. பயின்று வந்துள்ளது

)
வினைப்படிமம்

)
பயன் படிமம்

)
மெய் படிமம்

)
உருப்படிமம்

விடை: ) வினைப்படிமம்

 

3.கூற்று : உவமை உருவகம் போலப் படிமம் வினை, பயன், மெய், உரு

ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்

காரணம்
;
எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை

)
கூற்று சரி, காரணம்
தவறு

)
கூற்று தவறு, காரணம்
சரி

)கூற்று
தவறு, காரணமும் தவறு

)
கூற்றும் சரி, காரணமும்
சரி

விடை: ) கூற்று
சரி, காரணம் தவறு

 

4.மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க

 

)
நெருஞ்சிக் கட்கின் புதுமலர்
முட்பயந் தாங்கு

)
கட்டில் நிணக்கும் இழிசினன்
கையது

)
பாசிமணிக் கண்ணும் சிவப்புக்
கோட்டுக் கழுத்துக்

)
வெந்தாறு பொன்னின் அந்தி
பூப்ப

விடை: ) பாசிமணிக்
கண்ணும் சிவப்புக் கோட்டுக்
கழுத்துக்

 

5.
மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது“-இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?

விடை:

இதில்
மாந்தோப்பு பருவகாலத்தில் அழகு
தோன்ற இருப்பதை இப்படிமம்
உணர்த்துகிறது..

பூக்களும்
தளிர்களுமாகப் பட்டாடையை
மரம்

போர்த்தியிருப்பதாகக் காட்டி அதைப்
பெண்ணாகக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை,
உவமை உருவகம் இன்றி
பட்டாடை உடுத்திய பெண்ணின்
தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு இணைக்கிறது. உள்ளார்ந்த ஒப்பீடு இதில்
இருக்கிறது.

 

நம்மை அளப்போம்

பலவுள் தெரிக

1.சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம்காரணம்

)
நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்

)
மென்பொருள், வன்பொருள், வாகன
உற்பத்தியில் பங்கு

)
மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை.

 ) .
. அனைத்தும்

விடை: ) .
. அனைத்தும்

 

2.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

காரணம்:
கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது .

)
கூற்று சரி, காரணம்
தவறு

)
கூற்று தவறு. காரணம்
சரி

)
கூற்று தவறு, காரணம்
தவறு

)
கூற்று சரி, காரணம்
சரி

விடை: ) கூற்று
சரி, காரணம் சரி

 

3.
பொருத்துக

)
திருவல்லிக்கேணி  1.ஆறு மாவலிபுரச் செலவு.

)
பக்கிங்காம் கால்வாய்     2. கல் கோடரி.

)
பல்லாவரம்    3)
அருங்காட்சியகம்

)
எழும்பூர்          4)
கூவம்

)
1, 2, 4, 3

)
4, 1, 2, 3

)
4, 2, 1, 3

)
2, 4, 3, 1

விடை: ) 4, 1, 2, 3

 

4.உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்‘ – இத்தொடர் உணர்த்தும் பண்பு

)
நேர்மறைப் பண்பு

 ) முரண்பண்பு

)
எதிர்மறைப் பண்பு

)
இவை அனைத்தும்

விடை: ) முரண்
பண்பு

 

5.
விளியறி ஞமலி‘ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது

)
எருது

)
குதிரை

)
நாய்

)
குதிரை

விடை: ) நாய்

 

குறுவினா

1.கலிவிழா, ஒலிவிழா
விளக்கம் தருக

விடை:

கலிவிழா
:
எழுச்சி தரும் விழா

ஒலிவிழா
:
ஆரவார விழா

 

2.கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக?

விடை:

காலின்
மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு
1869
இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம்
அரிய ஓலைச்சுவடிகள், தாள்
சுவடிகள் புத்தகங்கள் எனப்
பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

 

3.தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளேதொடருக்குப் பதவுரை எழுதுக

விடை: அறம் செய்வார்
நிறைந்திருக்கும் சென்னையில் கந்த கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே
என்பதாகும்.

 

4.பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக?

விடை:

பெருங்கடல் பரப்பில் வாழும் சிறுகுடிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்
என்பது இத்தொடரின் பொருளாகும்.

பெருங்கடல் X சிறுகுடி என்பதே இத்தொடரில் உள்ள முரண் நயம்
ஆகும்

 

1.சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக?

விடை:

சென்னை
நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு, அதன்
பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக்கடினம். இந்திய சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட பல
கட்டடங்கள் இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.

ஆவணங்களை
முறையாகக் கையாளும் பழக்கம்
கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கியமெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்
சாரசெனிக் கட்டட முறையில் அமைந்தது.

இது,
இன்று தமிழ்நாடு ஆவணக்
காப்பகம் என்று வழங்கப்படுகிறது.

தமிழ்ச்
சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மை தரவுகள் பல
இங்கு பாதிக்கப்பட்டுள்ளன தென்னிந்திய வரலாற்றை அறிவதற்கும் பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கும் பேருதவி
புரியும் எழும்பூர் அருங்காட்சியகம் கோட்டை அருங்காட்சியகமும் சென்னையின் அடையாளத்தைப் பேணுபவையாகும், இந்தியாவின் முதல் பொது
நூலகம் கன்னிமாரா நூலகம்
நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்
ஆகும்.

இந்தியத்
திரைப்படத் துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய சென்னையின் திரைப்படத் தொழில் சார்ந்த
இடங்கள் முதல் திரையரங்கம்

ஆகியவை குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஆகும்.

 

2.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

விடை:

அறம்
செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

குளிர்ந்த
முகத்தோற்றத்தை உடைய
தூய மாணிக்க மணியே!

அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவ
மணியே!

ஒரு
நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய
மலர் போன்ற திருவடிகளை

நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.

உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு
என்னைப் பற்றாதவாறு காக்க
வேண்டும்.

என்று
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் கேட்கிறார்.

 

3.பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையை திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்.

விடை:

இளம்
பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த
வீதிகளையுடைய ஊர்
திருமயிலை அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நடைபெறும்.

மயிலை
கபாலீச்சுரம் என்னும்
கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஆரவார விழாவாக பங்குனி
உத்திரத் திருவிழா நடைபெறும்.

பூசையிடுதலும் நடக்கும் என்று ஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.

 

 

4. நெல்லின்
நேரே வெண்கல் உப்பு‘ – இத்தொடரின் வழி பண்டமாற்று  வணிகத்தை
விளக்குக?

விடை:

பரதவர்
பெரிய கடல் பரப்பில்
மீன் வேட்டையாடுவர். நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு
செய்யாமலே உப்பு விளைவிப்பவர்.

அந்த
வெண்ணிறக் கல் உப்பை,
உப்பு வணிகர் தங்களது
வண்டியில் ஏற்றிச் வண்டியில் பூட்டிய எருதுகளை
விரட்டக் கையில் தாழ்கோல்
வைத்திருப்பர்.

கோடை
காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட
குன்று கடந்து தொலைவில்
உள்ள ஊர்களில் விற்பனை
செய்வர்.

அத்தகைய
உமணர் ஒருவரின் மகள்,
அழகும் இளமையும் வாய்ந்தவன். அவள் தன் கையில்
அணிந்திருந்த அழகிய
வளையல்கள் ஒலிக்கத் தெருவில்
கைகளை வீசி நடந்து
சென்றுஉப்புக்கு மாற்றாக
நெல்லைத் தந்து உப்பினை
பெற்றுக்கொள்ள வாரீரோ
என்று கூவினாள்.

இதன்மூலம்
பிறநிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாக பெற்றதை அறியலாம்.

 

5.
நெல்லின் நேரே வெண்கலம் உப்பு’ – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.

விடை:

உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை
விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்கக் காலத்தில்
பண்டமாற்று வணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

விளக்கம்:

உமணர்
ஒருவரின் மகள் அழகும்
இளமையும் வாய்ந்தவள். தன்
கைகளில் அணிந்திருந்த வளையல்கள்
ஒலிக்க வீதிக்குச் சென்றாள்.
அப்போது அந்த வீதி
வழியாக வந்த வணிகனை
நோக்கி.

உப்புக்கு
மாற்றாக நெல்லைத் தந்து
உப்பினைப்

பெற்றுக்
கொள்ள வாரீரோ! என்று
கூவினார்’.

நெல்லின்
நேரே வெண்கல் உப்பு
எனச்

சேரி
விலைமாறு கூறலின் மனைய்

என்ற பாடலடிகள்
மூலம் அறிய முடிகிறது.

 

நெடுவினா

1.ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு
நீங்கள் பார்த்த அல்லது
வாழ்ந்த ஒரு நகரம்
குறித்து இருபக்க அளவில்
கட்டுரை எழுதுக

விடை:

முன்னுரை:

நான்
வாழ்ந்த நகரம் மதுரை
என்னும் மாநகரம் ஆகும்.
அதன் வரலாற்றையும் வடிவழகையும் விளக்கமாக உரைக்க முயல்கிறேன்

மதுரை பெயர்க்காரணம்;

மதுரை,
பாண்டிய நாட்டின் பழைமையான
தலைநகரம், மதுரை என்ற
சொல்லுக்குஇனிமைஎன்று
பொருள், தமிழ் என்ற
சொல்லுக்கும்இனிமை
என்றுதான் பொருள். தமிழைப்போல இனித்து இருந்ததால் மதுரை
எனப்பட்டது அதனால்தான் புறநானூறு
தமிழ்க்கெழு கூடல்என
மதுரை புகழ்கிறது.

நான்மாடக்கூடல்:

திருநள்ளாறு, திருவாலவாய், திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு கோவில்கள் கூடி இருந்ததால் நான்மாடக் கூடல் எனவும்
மதுரை வழங்கப்பட்டது.சங்கப்புலவர்கள் கூடி தமிழ் வளர்த்ததால்கூடல்எனவும் வழங்கப்பட்டது.

வடிவமைப்பு:

மதுரை
வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் யானை
மீது ஒருவன் உட்கார்ந்து, தன் கையால் உயரமாக
வெற்றிக் கொடியை ஏந்திச்
செல்லும் அளவுக்கு குன்றைக்
குடைந்தாற் போன்ற வாயிலும்,
பாம்பு போல நெளிந்து
செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச் சுற்றி ஆழ்ந்து
அகன்ற அகழியும் இருந்துள்ளன. இன்றும் மதுரையின் நகர
அமைப்பு வியப்பு உள்ளதாக
உள்ளது. ரத வீதிகளும்,
மாசி வீதிகளும், ஆவணி
மூல வீதிகளும், அருகருகில் அமைந்து அழகு தருகின்றன.

மீனாட்சி அம்மன்
கோவில்:

மீனாட்சி
அம்மன் கோவிலில் மீனாட்சி
அம்மையும், சொக்கநாதரும் அழகாக
வீற்றிருந்து அருள்
பொழிகின்றனர். இக்கோவிலின் உள்ளே பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

வரலாறு:

திருமலை
நாயக்க மன்னர் மதுரையில்
மாற்றங்களைக் கொண்டு
வந்த மதுரையைக் கவினுற
அமைத்தார், மீனாட்சியம்மன் கோவிலுக்குத் திருப்பி பல செய்தார்.
திருமலை நாயக்கர், மகாலை
அமைத்து மதுரையை அழகூட்டின
சித்திரைத் திருவிழாவை பன்னாட்டு
மக்களும் பார்த்து மகிழும்படி செய்தார்.

சிறப்புகள்:

பரஞ்சோதிப் புலவரின் திருவிளையாடற்புராணம் தருமிக்குப் பொற்கி அளித்த
படலம் பற்றிக் கூறுகிறது.
மதுரையில்தான் சமண
முனிவர்கள் நாலடியார் இயற்றினர்.
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் நூலை குமரகுருபரர் கொடுத்ததும் மதுரையில்தான். கோவலன்
கொலை செய்யப்பட்டகோவலன்
பொட்டல் மதுரையில் தான்
இன்றும் உள்ளது

கல்வி
நிறுவனங்கள்:

மதுரையில்
தான் தமிழ்ச்சங்கம் அமைந்து
இருந்தது. நான்காம் தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் அமைந்திருந்தது. இன்றும் மதுரை காமராசர்
பல்கலைக் கழகம், பல
மருத்துவக் கல்லூரிகள், விமான
நிலையம் போன்றவை அமைந்துள்ளன.

முடிவுரை:

அன்றுமுதல் இன்றுவரை தூங்காநகரம்என்று
அனைவராலும் அழைக்கப்படும் மதுரை
எனக்குப் பிடித்தமான நகரம்
மட்டுமல்ல, எல்லார்க்கும் பிடித்தமான நகரமும் ஆகும். வாழ்க
மதுரை! வளர்க மதுரையின்
வளம் !

 

2.கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றனர்“- இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.

விடை:

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெழும்புகள் என்றார்
காந்தியடிகள். அந்த
கிராமங்களின் நிலையினை
நாம் ஆராய்ந்தால் அது
தன் முகவரியை இழந்தது
மட்டுமல்ல, முகத்தையும் இழந்து
நிற்பது தெரியவரும். கிராமங்களின் மண்வாசனை இன்று பறந்துவிட்டது. ஆலைக் கழிவுகளும், அழுக்குகளை சுமந்த நீர் நிலைகளும்
வாகனப்புகை மூட்டமும் கிராமங்களின் குரல்வளையை நெறித்துக் கொண்டுள்ளன.

விளைநிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக
மாறிவிட்டன. விவசாயிகள் தங்கள்
தொழிலை விட்டுவிடவும் முடியாமல்,
தொட்டுத் தொடரவும் முடியாமல்
இருதலைக் கொள்ளி எறும்பு
களாகத் திண்டாடி வருகிறார்கள். குளங்கள், குட்டைகள், ஓடைகள்,
எல்லாம் இப்போது கட்டடங்களின் குவியலாய் மாறிவிட்டன. எனவே
சிறு மழை வந்தாலும்
வாழ்க்கை சின்னாபின்னமாக மாறிவிடுகிறது.

ஆழ்துளைக்
கிணறுகளை அமைத்து  நீரை உறிஞ்சி
எடுத்துவிட்டார்கள். நிலம்
இல்லாமல், நீரில்லாமல் விவசாயம்
செய்வது எங்கே திணறுகிறார்கள் மக்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை குறிவைத்து வியாபாரம் செய்கின்றன. அளவில்லாத
வருமானம் வந்து சேர்வதால்
நிலத்தடி விதை நெல்லையும் விற்றுவிடத் துணிந்துவிட்டார்கள் விவசாயிகள், இயற்கை மறைகிறது. அந்த
இடத்தில் செயற்கை நிறைகிறது.
போலியான மனங்களுடன் வாழ
மக்கள் தயாராகிவிட்டார்கள். கட்டடங்கள் காளான்களை போல முளைத்துக் கொண்டுள்ளன. நட்டு வளர்த்த
மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட வெற்று வெளியாக வெறிச்சோடிக் கிடக்கிறது. மண்ணில் விழுந்த
சொர்க்கத்துண்டுகளாய் இருந்த
கிராமங்கள் செயற்கை விரும்பிகளால் நகரங்களாக மாறி கொண்டிருக்கிறது.

இதுதொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே
தோன்றினால் நாம் வெற்றி
வாழ்க்கை வாழலாம். மீண்டும்
கிராமங்களில் மலர்க்கூட்டம் மலரலாம்

 

3.சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டம் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன

விடை:

மயிலாப்பூர்:

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு திருவிழாக்கள்.

கோவில்
ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று
அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள்.

அத்தகைய
விழாக்கள் நிறைந்த ஊர்
திருமயிலை, மயிலை என்று
அழைக்கப்படும் மயிலாப்பூர்.

இவ்வூர்
சென்னை மாநகரின் ஒரு
பகுதி அங்குள்ள இறைவனுக்குக் கொண்டாடப்படும் பங்குனி
உத்திர விழா அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது.

இளம்
பெண்கள் ஆரவாரத்துடன் கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த
வீதிகளை உடைய பெரிய
ஊர் திருமயிலை.அங்கு
எழுச்சிமிக்க விழாக்கள்
நிகழும்.

மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும்
கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திரத்
திருவிழா ஆரவாரம் நடைபெறுவதாக ஞானசம்பந்தர் காட்சிப்படுத்தியுள்ளார்.

கந்த
கோட்டம்:

அறம்
செய்வார் நிறைந்திருக்கு சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

குளிர்ந்த
முகத்தோற்றத்தை உடைய
தூய மாணிக்க மணியே!
அம்மணிகளுள் அருள் நிறைந்த
சைவ மணியே!

ஒரு
நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய
மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.

உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு
என்னைப் பற்றாதவாறு காக்க
வேண்டும் பெருமை சான்ற
நினது புகழையே நான்
பேச வேண்டும்.

பொய்
பேசாதிருக்க வேண்டும்.

சிறந்த
வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்

மதமான
பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்

துறவுக்கு
எதிரான பெண்ணாசையை என்
மனம் மறக்க வேண்டும்
என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

மதியும்
நின் கருணையாகிய நிதியும்
நோயற்ற வாழ்வும் உடையவனாக
நான் இருக்க வேண்டும்

ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே,
இத்தகைய சிறப்புகளை நீ
எனக்கு அருள்வாயாக என்று
வள்ளலார் கந்தகோட்டம் கந்தவேளிடம் வேண்டுகிறார்.

download2Bbutton 5 Tamil Mixer Education

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]