Join Whatsapp Group

Join Telegram Group

12th Tamil – Lesson 1 – உயிரினும் ஓம்பப்படும் – New Book Back Question & Answers

By admin

Updated on:

download2Bbutton 14 Tamil Mixer Education

இலக்கணத் தேர்ச்சிகொள்:

1. பிழையான தொடரைக் கண்டறிக

) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

விடை: ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

 

2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரை தேர்க!

) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன

விடை: ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

 

3. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம்இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும் .

விடை:

முடிந்தால் தரலாம்:

முடிந்தால்கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)

ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.

உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம்.

 

முடித்தால் தரலாம்:

முடித்தால்செயல் முடிந்த பின்

தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.

வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.

 

4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

விடை:

(i) எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். , , / , / , , ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.

(ii) இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.

(iii) வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.

(iv) கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.

 

பலவுள் தெரிக

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

) யாப்பருங்கலக்காரிகை

) தண்டியலங்காரம்

) தொல்காப்பியம்

) நன்னூல்

விடை: ) தொல்காப்பியம்

 

2. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

) அடிமோனை, அடி எதுகை

) சீர் மோனை, சீர் எதுகை

) அடி எதுகை, சீர் மோனை

) சீர் எதுகை, அடியோனை

விடை: ) அடி எதுகை, சீர் மோனை

 

3. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்குகவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

) பொதிகையில் தோன்றியது

) வள்ளல்களைத் தந்தது

) மட்டும் சரி

) , இரண்டும் சரி

) மட்டும் சரி

) , இரண்டும் சரி

விடை: ) , இரண்டும் சரி

 

4. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.

கருத்து 2: தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

) கருத்து 1 சரி

) கருத்து 2 சரி

) இரண்டு கருத்தும் சரி

) கருத்து 1 சரி 2 தவறு

விடை:  ) இரண்டு கருத்தும் சரி

 

5. பொருத்துக.

) தமிழ் அழகியல்       – 1. பரலி சு. நெல்லையப்பர்

) நிலவுப்பூ                
2.
தி. சு. நடராசன்

) கிடை                      
– 3.
சிற்பி பாலசுப்பிரமணியம்

) உய்யும் வழி             – 4.
கி. ராஜநாராயணன்

) 4, 3, 2,1

) 1, 4, 2, 3

) 2, 4, 1, 3

) 2, 3, 4, 1

விடை:  ) 2, 3, 4, 1

 

குறுவினா:

1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

விடை:

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை
    நவின்றொழுகும் (செய்
    135)
    என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
  • மொழிக்குள் இருக்கும்
    ஒரு வலிமைமிக்க ஆற்றல்
    கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை
    வெளிப்படுத்திக் கொள்வதே
    நடை எனப்படும்.

 

2.       படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக” – இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

விடை:

ஓசை
நயமிக்கச் சொற்கள்:

படாஅம்
ஈத்த, கெடாஅ நல்லிசை,
கடாஅயானை, நல்லிசை.

இலக்கணக் குறிப்புகள்:

படாஅம்,
கெடாஅ, கடாஅசெய்யுளிசையளபெடைகள்

ஈத்த
பெயரெச்சம்

நல்லிசை
பண்புத்தொகை

 

3.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

விடை:

செந்நிறத்து வானம் போல் சிவந்த
கைகள் உடைய உழைக்கும்
தொழிலாளர்களின் திரண்ட
தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட
தமிழின் துணை வேண்டும்
என்கிறார் சிற்பி.

 

4. விடியல்,
வனப்புஇரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

விடை:

பூத்துக்
குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின்
வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின்
தோற்றம் இயற்கையின் வனப்பை
எடுத்துரைக்கும்.

 

சிறுவினா:

1.
சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்விளக்குக.

விடை:

  • எந்தத் தொன்மையான
    மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும்
    பொருளும் இணைந்து கலைவடிவம்
    கொள்கின்றன.
  • இதனையே அந்தப்
    பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும்
    விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை
மூவிருங் கூடி

உடன்றனிர் ஆயினும்
பறம்பு கொளற்கரிதே;

முந்நூறு ஊர்த்தே
தண் பறம்பு நன்னாடு;

முந்நூறு ஊரும்
பரிசிலர் பெற்றனர்;

உயிர்
ஒலிகள் குறிப்பாக நெடில்
ஒலிகளின் வருகையும், சில
ஒலிகளும் சில சொற்களும்
திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு
பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று:படாஅம்
ஈத்த கெடாஅ நல்லிசை
கடாஅ யானைக்’ – இவ்வரிகள்
ஒலிக்கோலத்தின் பண்பை
உணர்த்துகிறது.

 

2.
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

விடை:

  • கதிரவன் தன்
    கதிர்களைச் சுருக்கிக் கொண்டு
    மேற்கு நோக்கி மறைவது
    இயற்கை.
  • ஆனால் கவிஞர்
    செம்மைமிகு சூரியன் மாலையில்
    மலைமுகட்டில் தன்
    தலை சாய்க்கிறான் என்கிறார்.
  • கதிரவனின் கதிரொளி
    பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று
    சிற்பி நயம்பட விளக்குகிறார்.

 

3. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

விடை:

இடம்: இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள்: மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.

 

4.
பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

1. பழையன கழிதலும் புதியன புகுதலும்

வலுவல கால வகையி னானே.

நன்னூல்

2.மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

சிற்பி
பாலசுப்பிரமணியன்

விடை:

நன்னூல்:

  • பழையவற்றை ஒதுக்கி
    புதியவற்றை புகுத்த வேண்டும்.
  • தேவையற்ற சொல்,
    பொருள், வழக்கம் எல்லாம்
    காலமாறுதலுக்கு ஏற்ப
    புதிய சொல், பொருள்,
    வழக்கம் தேவை.

சிற்பி
பாலசுப்பிரமணியன்:

  • பழமை செயல்பாடுகளுக்கு புதிய வடிவம்
    கொடுக்கப்படும்.
  • தமிழ்த்தாயின் பழமைமிகு
    செயல்பாடுகளுக்குப் புதிய
    வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட
    வா.

 

நெடுவினா:

1. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

விடை:

கவிதையின் நடையைக் கட்டமைப்பன:

பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

கவிதைநடையியல்:

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:

தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின்பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

சான்று:கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே

இப்பாடலில் , , , முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

சொற்புலம்:

சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய்: 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

தொகைநிலை:

சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.

அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.

சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

தொடரியல் போக்குகள்:

ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

கவிதை மறுதலைத்தொடர்:

தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

இடுகவொன்றோ, சுடுகவொன்றோ

படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 239)

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல,: – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போபுதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

இறுதியாக:

நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும்: சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூகபண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.

 

2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

விடை:

மொழிப்பற்று:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண் டும் என்கிறார்.

சமூகப்பற்று:

சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.

சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

 

3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

விடை:

  • இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.
  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

 

4. “சொல்லோவியங்கள்” (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.

விடை:

உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை

download2Bbutton 15 Tamil Mixer Education

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]