நெட் இல்லாமலேயே Button Phone மூலம் பணம் அனுப்பலாம் – ரிசர்வ் வங்கி
வங்கி
சேவைகளை மிக எளிதாக்க
அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு புது
சலுகைகளை வழங்கிவருகிறது.
அந்த
வகையில் தற்போது சாதாரண
பட்டன் போனிலிருந்தே பணம்
அனுப்பும் யுபிஐ வசதியை
இந்திய ரிசர்வ் வங்கி
அறிமுகம் செய்துள்ளது.இதற்கு
‘123 பே‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆன்லைன்
பரிமாற்றத்தை பாதுகாப்பாக செய்யும் வகையிலும் அவற்றை
மேம்படுத்தும் வகையிலும்
இந்த புதிய பிரத்யேக
யுபிஐ வசதியை அறிமுகம்
செய்யதுள்ளதாக ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது. இந்த
புதிய தொழில்நுப்டத்தால் இந்தியா
முழுவதும் சுமார் 40 கோடி
பேர் பயனடைவார்கள் என்று
ரிசர்வ் வங்கி ஆளுநர்
தெரிவித்துள்ளார்
இது
குறித்த லேட்டஸ்ட் தகவல்களை
பெற பிரத்யேக செயலியும்,
திட்ட அமைப்பும் உருவாக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள
மக்கள் இந்த வசதியின்
மூலம் பெரும் பயனடைவர்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘123 பே‘
யுபிஐ ஆப் மூலம்
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை செய்யலாம். இணைய வசதி
இல்லாமலேயே பரிவர்த்தனை மேற்கொள்ள
முடியும் என்பதே கூடுதல்
சிறப்பு.