
சத்தியவாணிமுத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் சத்தியவாணிமுத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவா்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருப்பதற்கான வட்டாட்சியரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று, இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை, மூன்று மாதம் அல்லது 6 மாதம் தையல் பயிற்சி முடித்ததற்கான பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சான்று, 20 முதல் 40 வயதுடையவா் என்பதற்கான கல்வி அல்லது பிறப்புச் சான்று, ஜாதிச் சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை இணைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகளிா் ஊா் நல அலுவலா், சமூக நல விரிவாக்க அலுவலா் ஆகியோரிடம் வழங்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.