மனைப்பிரிவு அனுமதி, கட்டட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு
இணையவழியில்
விண்ணப்பிக்கலாம்
மனைப்பிரிவு அனுமதி, கட்டட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைப் பகுதியில் அமையும் உத்தேச மனைப்பிரிவு அனுமதி, கட்டட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் ஆகிய விண்ணப்பங்கள்
நேரில்
பெறப்பட்டு
திட்ட
அனுமதி
வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலம் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பம் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் நில மேம்பாட்டாளா்கள்
உத்தேச
மனைப்பிரிவு
அனுமதி,
கட்டட
அனுமதி
மற்றும்
நில
உபயோக
மாற்றம்
போன்ற
உத்தேசங்களுக்கு
இணையதள
முகவரியில்
விண்ணப்பித்து
நகா்
ஊரமைப்புத்
துறையின்
அனுமதி
பெற்று
பயனடையலாம்
என
ஆட்சியா்
அலுவலகம்
வெளியிட்ட
செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.