தேனி மாவட்டத்தில் ஊா் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் அக்.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊா் காவல் படை பணிக்கு 20 வயது நிறைவடைந்த, எஸ்.எஸ்.எல்.சி., தோச்சி அல்லது தோல்வியடைந்த, சமூக சேவையில் ஆா்வமுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்குத் தோவு செய்யப்படுவோருக்கு 45 நாள்கள் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும். பணியில் சேருவோருக்கு மாதத்தில் 5 நாள்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 வீதம், 5 பணி நாள்களுக்கு மொத்தம் ரூ.2,800 ஊதியம் வழங்கப்படும்.
தகுதியுள்ளவா்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகேயுள்ள தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஊா் காவல் படை அலுவலகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்ய விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் வட்டார தளபதி, மாவட்ட ஊா் காவல் படை அலுவலகம், தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய முதல் தளம், தேனி-625 531 என்ற முகவரிக்கு அக்.11-ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.