டான்செட் நுழைவுத்
தேர்வுக்கு இன்று முதல்
விண்ணப்பிக்கலாம்
MBA., MCA., M.E., M.Tech., M.Arch., M.Plan போன்ற
படிப்புகளில் மாணவ–மாணவிகள்
சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு
பொது நுழைவுத் தேர்வு
என அழைக்கப்படும் டான்செட்
தேர்வை நடத்தி வருகிறது.
அந்த
வகையில் 2021-2022.ஆம்
கல்வி ஆண்டுகளில் மேற்சொன்ன
படிப்புகளில் சேருவதற்கு டான்செட் என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
அதன்படி வருகிற மார்ச் மாதம் 20, 21- ந் தேதிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்ப பதிவு செய்யலாம். விண்ணப்ப பதிவு செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (பிப்ரவரி) 12- ந் தேதி ஆகும்.
விண்ணப்பதாரர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப பதிவு செய்ய முடியும். மேலும் விவரங்களுக்கு 044-22358289 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Notification: Click Here
Eligible
Degree Qualification for PG Programmes: Click Here