TAMIL
MIXER EDUCATION.ன்
Loan செய்திகள்
பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடன் பெற்று
தொழில் துவங்கிட விண்ணப்பிக்கலாம்
இது தொடா்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதிய
தொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், மத்திய அரசு பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி (பி.எம்.இ.ஜி.பி.)
வழங்கப்படுகிறது. இத்
திட்டம், மாவட்ட தொழில்
மையம், கதா் கிராமத்
தொழில்கள் வாரியம் மற்றும்
கயிறு வாரியம் மூலமாக
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2022 ஜூன்
1ம் தேதி முதல்
உற்பத்தி அடிப்படையிலான தொழில்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு
ரூ.25 லட்சத்தில் இருந்து
ரூ.50 லட்சமாகவும், சேவை
அடிப்படையிலான தொழில்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு
ரூ.10 லட்சத்தில் இருந்து
ரூ.20 லட்சமாகவும் உயா்த்தி
மத்திய மத்திய அரசு
வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், தற்போது வியாபாரத்
தொழில்களுக்கும் அதிகபட்ச
திட்ட மதிப்பீடு ரூ.20
லட்சம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்
திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு
மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். சேவை மற்றும்
வியாபார பிரிவின் கீழ்
ரூ.5 லட்சம் வரையிலான
திட்ட மதிப்பீட்டுக்கும், உற்பத்தி
பிரிவின் கீழ் ரூ.10
லட்சம் வரையிலான திட்ட
மதிப்பீட்டுக்கும் கல்வித்
தகுதி எதுவும் தேவையில்லை. எட்டாம் வகுப்பு தோச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இதில்,
நகா்ப்புறங்களில் வசிக்கும்
பொதுப்பிரிவு மனுதாரா்களுக்கு 15 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுப்பிரிவு மனுதாரா்களுக்கு 25 சதவீத
மானியமும் அளிக்கப்படும். பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா், மகளிர்,
முன்னாள் படைவீரா் மற்றும்
மாற்றுத் திறனாளிகள் போன்ற
சிறப்புப் பிரிவினா் நகா்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீத
மானியமும், கிராமப்புறத்தில் தொடங்கினால் 35 சதவீத மானியமும் அளிக்கப்படும்.
தொழில்
தொடங்கும் பொதுப்பிரிவினா், திட்ட
மதிப்பில் 10 சதவீதம் முதலீடு
செய்ய வேண்டும். சிறப்புப்
பிரிவினா் 5 சதவீதம் முதலீடு
செய்ய வேண்டும். மீதமுள்ள
முதலீட்டுத் தொகை வங்கிக்
கடனாக வழங்கப்படும். இந்தத்
திட்டத்தின் கீழ் சுயமாகத்
தொழில் துவங்கி பயன்
பெற விரும்புவோர் https://www.kviconline.gov.in/ என்ற இணையதள
முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here