HomeBlogமாற்றுத்திறனாளி நலத் திட்ட உதவிக்கு இ - சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மாற்றுத்திறனாளி நலத் திட்ட உதவிக்கு இ – சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி-நலத்-திட்ட-உதவிக்கு-இ-சேவை-மூலம்-விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான உதவி விண்ணப்பங்களை இனி வரும் காலங்களில் இ-சேவை மற்றும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் நலத் திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம்,திருமண உதவித்தொகை மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆகிய 5 வகையான நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் அருகே உள்ள இ-சேவை மற்றும் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா்: திருப்பத்தாா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு இ-சேவை, இணையதளம் வழியாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -