சட்டப் படிப்புக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு
சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு
இளங்கலை சட்டப் படிப்புக்கு அக்டோபர் 6-ம் தேதி
வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு
சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்தின் சீர்மிகு
சிறப்பு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு எல்எல்பி (ஆனர்ஸ்)
படிப்புக்கும், அதேபோல,
அரசுசட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டுஎல்எல்பி படிப்புக்கும் ஆன்லைன்விண்ணப்ப பதிவு செப்டம்பர் 8-ம்தேதி
தொடங்கி தொடர்ந்து நடந்து
வருகிறது.
மாணவர்கள்
சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tndalu.ac.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சீர்மிகு
சிறப்பு சட்டக் கல்லூரியின் எல்எல்பி ஆனர்ஸ் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி
நாள் September 30ம்தேதி
ஆகும்.
அதேபோல,
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் எல்எல்பிபடிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் October 6ம் தேதி ஆகும்.