HomeBlog100 புதிய சைனிக் பள்ளிகள்: மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சலிங் அறிவிப்பு
- Advertisment -

100 புதிய சைனிக் பள்ளிகள்: மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சலிங் அறிவிப்பு

100 New Cynic Schools: E-Counseling Announcement for Student Admission

100 புதிய சைனிக்
பள்ளிகள்: மாணவர் சேர்க்கைக்கு கவுன்சலிங் அறிவிப்பு

100 புதிய
சைனிக் பள்ளிகளில் மாணவர்
சேர்க்கைக்கு கவுன்சலிங் நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு
முழுவதும் 100 புதிய சைனிக்
பள்ளிகளை உருவாக்கும் அரசின்
நோக்கத்தை செயல்படுத்தும் வகையில்,
கவுன்சலிங் எனப்படும்
மின்னணு கலந்தாய்வை நடத்த
சைனிக் பள்ளி சொசைட்டி
தானியங்கி முறை ஒன்றை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சைனிக்
பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க
முதன்முறையாக கவுன்சலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. சைனிக்
பள்ளி பாடத்திட்டத்துடன், தேசியக்
கல்விக் கொள்கைக்கு ஏற்ற
வகையில், நாடு முழுவதும்
மாணவர்களுக்கு வாய்ப்பு
வழங்கும் அரசின் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, சைனிக்
பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கவுன்சலிங் பற்றி சைனிக் பள்ளி
சொசைட்டி விரிவான விளம்பரம்
செய்யத் திட்டமிட்டுள்ளது. சைனிக்
பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://sainikschool.ncog.gov.in/ என்ற
வலைதளத்தில் பதிவு செய்து
விவரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள்
10
பள்ளிகளைத் தேர்வு செய்யலாம்.
மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், பள்ளிகள் ஒதுக்கப்படும். முடிவுகள்
கவுன்சலிங் தளம்
மூலம் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -