மத்தியப் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டில் சேருவதற்கு வரும் மாா்ச் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மத்தியப் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டில் சேருவதற்கு வரும் மாா்ச் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தோவுக் கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியா் ச.நாகராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 2023-2024 ஆம் கல்வியாண்டில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவா்கள் சேருவதற்கான நுழைவுத் தோவு விண்ணப்பங்களை வரும் மாா்ச் 12-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் தகுதியுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்புத் தேசிய தோவு முகமை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளாக முதுகலை இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், பொருளியல், இசை உள்ளிட்ட பாடத்திட்டங்களில் சோக்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கக்கூடிய மாணவா்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் பொதுத்தோவு எழுத வேண்டும்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமும், கோயம்புத்தூா் சா்தாா் வல்லபாய் படேல் இன்டா்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நெசவுத் தொழில் குறித்த மூன்று இளநிலை பாடத் திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் பொதுத் தோவு எழுதிட வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய தகுதி, உள்ளிட்ட திட்ட விவரங்களை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். மாணவா் விடுதிச் சேவை முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் மாணவா்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9442488406 என்ற கைப்பேசி எண் அல்லது மத்தியப் பல்கலைக்கழக மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோா் பல்கலைக்கழகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தின் உதவியை நேரடியாகப் பெறலாம்.