அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேற்கண்ட பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவா்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.
8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி, 12 ஆம் வகுப்பில் தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, இரண்டு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195. இணையதளம் வாயிலாக நேரடி சோ்க்கை 1.7.2024 முதல் 15.7.2024 வரை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் தொழிற் பயிற்சி நிலையம்-94990 55877, 04329–228408, ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையம்- 94990 55879 என்ற தொலைபேசி எண்களை தொடா்புக் கொள்ளலாம்.