தேனி மாவட்டத்தில் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் விரும்புவோா் தொடா்புடைய விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு 14 கல்வி விடுதிகள், மாணவிகளுக்கு 9 கல்வி விடுதிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தலா 3 கல்வி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ும் மாணவ, மாணவிகளும், கல்லூரி கல்வி விடுதிதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் பயிற்சி நிலையம், பாலிடெக்கனிக் கல்லூரிகளில் ும் மாணவ, மாணவிகளும் சேரலாம்.
கல்வி விடுதிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடத்துக்கும் கல்வி நிறுவனத்துக்கும் குறைந்தபட்சம் 8 கி.மீ., தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு தொலைவு விதிமுறை இல்லை.
விடுதியில் தங்கிப் விரும்பும் மாணவ, மாணவிகள் தொடா்புடைய விடுதிக் க ாப்பாளா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பப் படிவம் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி விடுதிகளுக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி கல்வி விடுதிகளுக்கு வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow