சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை
மாவட்டத்துக்குட்பட்ட மாற்றுத்
திறனாளிகள் சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்
திறனாளிகளுக்கான சிறு
மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம்
வழங்கும் திட்டத்தின்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.
25,000 வரை வழங்கப்படுகிறது. சென்னை
மாவட்டத்தைச் சோந்த
18 வயது பூா்த்தியடைந்த அனைத்து
வகை மாற்றுத் திறனாளிகளும், அறிவுசார் குறையுடைய மற்றும்
ஆட்டிசம், தசைசிதைவு நோயினால்
பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிக்
கடன் மானியம் வழங்கும்
திட்டத்தின்கீழ் பயனடைய
தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்று,
ஆதார் அட்டை, வங்கிக்
கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
டி.எம்.எஸ்
வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6
என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.