காந்தி அருங்காட்சியகத்தில் யோகா பயிற்சி
முகாம்
மதுரை
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் யோகா மற்றும்
தியான பயிற்சி முகாமுக்கு பதிவு செய்துகொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் வெளியிட்டுள்ள செய்தி:
சா்வதேச
யோகா தினத்தை முன்னிட்டு முழுமையான ஆரோக்கியத்துக்கான யோகா
மற்றும் தியானம் என்ற
தலைப்பில் காந்தி நினைவு
அருங்காட்சியகத்தில் யோகா
பயிற்சி முகாம் ஜூன்
6 முதல் 11-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது.
பெரியவா்களுக்கு காலை 6 மணி முதல்
8 மணி வரையும், மாணவா்கள்,
குழந்தைகளுக்கு மாலை
4 மணி முதல் 5 மணி
வரையும் பயிற்சி முகாம்
நடைபெறும். இதில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சி
முகாமில் பங்கேற்க விருப்பம்
உள்ள பெரியவா்கள் ரூ.200,
மாணவா்கள், குழந்தைகள் ரூ.100
பதிவுக்கட்டணமாக செலுத்தி
பெயா்களை பதிவு செய்து
கொள்ளலாம்.
மேலும்
தொடா்புக்கு அருங்காட்சியக ஆராய்ச்சி
அலுவலா் ஆா்.தேவதாசை
9994123091
என்ற கைப்பேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.