மண்பானையிலும் மகசூல்
எடுக்கலாம்–மாடித்தோட்ட சுய
தொழில் துவங்க ஆலோசனைகள்
நம்ம
இடத்தில இருக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி தோட்டம் அமைப்பதும் முக்கியமானது.
பொதுவா
மக்கள் காசு போட்டவுடனே பொருள் வரணும்னு எதிர்பார்க்கிறாங்க.
ஆனால்,
பொறுமையும் கொஞ்சம் அவசியம்.
அந்த வகையில், வீட்டுத்தோட்டம் அமைப்பதில் மக்களிடம் ஆர்வம்
அதிகரித்து வருகிறது.
அது
ஆரோக்கியமான செய்திதான். வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் என்றால்
அதிக செலவு செய்யத்
தேவையேயில்லை.
பொதுவாக,
ஒரு செடி வளர்வதற்குத் தேவையானது ஓர் ஊடகம்.
அது பை, தொட்டி,
சாக்கு என எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்து, அது வளரத்
தேவையான சத்துகள், தண்ணீர்
இவை மூன்றும்தான் அடிப்படை.
இவை
இருந்தால் போதும், நமது
விருப்பத்துக்கேற்ப விவசாயம்
செய்யலாம். உங்கள் இடத்தில்,
உங்களால் எவ்வளவு செலவு
முடியும் எனத் திட்டமிடுங்கள். அதற்கேற்ப செயல்பட்டால் போதும்.
உதாரணமாகப் பழைய பானைகள் இருந்தால்கூடப் போதும் செடிகளை வளர்க்கலாம். அந்த வகையில் மிகவும்
செலவு குறைந்த மூன்று
முறைகளில் செடிகளை வளர்க்கும் முறைகளைப் பார்ப்போம்.
வழக்கமாகப் பானையின் வாய் பகுதியில் தான் செடிகளை
வளர்ப்பார்கள். ஆனால்,
குழி விவசாயம் (Pole Farming) முறையில்
பானையின் பக்கவாட்டிலும் துளையிட்டு அதில் நாற்றுகளை நடவு
செய்து பயிர் வளர்க்கலாம்.
துளை
போட்டபிறகு, உரக்கலவையால் நிரப்பி
ஒன்றின் மீது ஒன்றாக
அடுக்கிக்கொள்ள வேண்டும்.
அதில் நாம் பயிர்
செய்ய வேண்டிய நாற்றுகளை
நடவு செய்ய வேண்டும்.
நாற்றுகளை மேல் நோக்கி
நேராகத்தான் நடவு செய்ய
வேண்டும் என்பதில்லை. பக்கவாட்டிலும் நடவு செய்யலாம்.
நான்கு
பானைகளில் 16 செடிகளை நடலாம்.
பானையில் மேல்பகுதியில் அழகு
பூச்செடிகளை நடவு செய்தால்
பார்க்க அழகாக இருக்கும்.
மேற்பகுதியில் மண்ணுக்குக் கீழே விளையக்கூடிய கிழங்கு
வகை பயிர்கள், முள்ளங்கி
போன்றவற்றை நடவு செய்யலாம்.
அந்தப்
பயிர்களைப் பக்கவாட்டில் நடவு
செய்யக் கூடாது. அப்படி
நடவு செய்தால் சைஸ்
பெரிதானால் அறுவடை செய்வதில்
சிக்கலாகி விடும்.
இது
மாதிரி மொட்டை மாடியில்
நான்கு மூலைகளில் வைத்தால்கூட 50 செடிகள் வளர்க்கலாம். பானைகளில்
தக்காளி, கத்திரி, மிளகாய்,
வெண்டி மாதிரியான வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைச் சாகுபடி
செய்யலாம்.
ஒரு
பயிர் அறுவடை முடிந்த
பிறகு, பானைகளில் உள்ள
உரங்களைக் கலக்கி விட்டு,
மீண்டும் அடுக்கி, வேறு
பயிர்களை நடவு செய்து
சாகுபடியைத் தொடரலாம். ஒருதடவை
வாங்கிய பானையைப் பல
ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
இதே
முறையைப் பெரிய பிளாஸ்டிக் டிரம்களிலும் பயன்படுத்தலாம். 100, 200 லிட்டர் கொள்ளளவு
கொண்ட பிளாஸ்டிக் டிரம்களில் பக்கவாட்டில் துளைபோட்டு காய்கறி பயிர்களை வளர்க்கலாம்.
டிரம்களைப் பயன்படுத்தும்போது வீட்டுக்
கழிவுகளையும் அதில்
சேர்த்துக்கொள்ளலாம். 200 லிட்டர்
கொள்ளளவு கொண்ட டிரம்மில்
20 துளைகள் வரை போட்டு,
நாற்று நட்டு செடிகளை
வளர்க்கலாம். இந்த முறையிலும் நான் எங்க வீட்டுல
நிறைய செடிகள் வளர்த்துட்டு இருக்கேன். இதுவும் செலவு
குறைந்த முறை. இந்த
முறையில வீட்டோட கழிவுகளையும் உரமாக மாற்ற முடியும்.
மூங்கில்
கட்டைகளிலும் இதே
முறையில பயிர் வளர்க்கலாம். மூங்கில் கட்டைகளில் இயற்கையாகவே ஒரு கணுவுக்கும் மற்றொரு
கணுவுக்கும் இடையே இடைவெளி
இருக்கும்.
அதனால்
அதை மேல்பக்கம் கொஞ்சம்
பட்டை எடுத்துவிட்டு, ஒரு
அறையில் உரக்கலவையை நிரப்பி,
அதில் நாற்றுகளை நட்டுத்
தொங்கவிடலாம். இப்படி
செலவு குறைந்த பல்வேறு
முறைகளில் வீட்டுத்தோட்டத்தில் விவசாயம்
செய்யலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.