HomeBlogஉலக மகளிர் தினம் (மார்ச் 8) – புதிய செயலி (Her Circle) வெளியீடு
- Advertisment -

உலக மகளிர் தினம் (மார்ச் 8) – புதிய செயலி (Her Circle) வெளியீடு

 

World Women's Day (March 8) - New Circle launches

உலக மகளிர்
தினம் (மார்ச் 8) – புதிய
செயலி (Her Circle)  வெளியீடு

சிறப்பு
மிக்க பெண்களுக்கான பிரத்யேகமாக Her Circle எனும் சமூக
வலைதளத்தை ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ்
அம்பானி உலக மகளிர்
தின பரிசாக வெளியிட்டுள்ளார்.

இந்த
வலைதளம் மூலமாக பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும்
நோக்கில் துவங்கப்பட்டு வருகிறது.
இந்த வலைத்தளம் மூலமாக
பெண்களுக்கு தேவையான வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர
தரவுகள் கிடைக்கின்றன.

இவை
அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம்,
பணி, சமூக சேவை,
அழகு, பொழுதுபோக்கு மற்றும்
பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இந்த வலைத்தளத்தில் தொண்டு
நிறுவனங்கள் மற்றும் இதர
நிறுவனங்கள் கலந்துகொள்ள முடியும்.
இதன் மூலமாக பல
பெண்களின் திறமைகள் வெளி
வர முடியும்.

இது
வலைதளம், கூகுள் பிளே
ஸ்டோர் மற்றும் ஜியோ
ஆப் ஸ்டோர்களின் மூலமாக
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஐஒஎஸ் தளத்தில் இந்த
செயலியை பதிவிறக்கம் செய்ய
முடியாது காரணம் இந்த
செயலியை பெண்கள் மட்டுமே
பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -