முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை
தமிழ்நாடு
முதலமைச்சர் அலுவலகத்தில் புத்தாய்வு திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை வேலையில்
தேர்ந்தடுக்க அரசு
முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு
அரசுக்கு உதவ இளைஞர்களை
தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை
தமிழ்நாடு அரசு இன்
று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு
இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின்
வளத்தை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை தமிழ்நாடு அரசு
அறிவித்துள்ளது.
இதில்
இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம்
ஊக்க ஊதியத்துடன் பயிற்சி
வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம்,
தமிழக அரசின் முதன்மை
திட்டங்களை செயல்படுத்தும் பணியில்
ஈடுபடுவார்கள் என்றும்
தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி
வழங்கப்பட உள்ளது. மேலும்
இந்த திட்டத்திற்கு ரூ.5.66
கோடி ஒதுக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.