வீட்டுக்கு ஒருவருக்கு வேலை – அமமுக தேர்தல்
அறிக்கை
அதிமுக
திமுக மற்றும் மக்கள்
நீதி மய்யம் ஆகிய
மூன்று கூட்டணியுடன் நான்காவது
கூட்டணியாக தினகரனின் அம்மா
மக்கள் முன்னேற்ற கழக
கூட்டணியும் வரும் தேர்தலில்
களம் காண்கிறது
இந்த
நிலையில் இன்று நடந்த
பொதுக்கூட்டம் ஒன்றில்
அம்மா மக்கள் முன்னேற்ற
கழகத்தின் தேர்தல் அறிக்கை
வெளியானது.
69% இட
ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமூகங்களுக்கு இட
ஒதுக்கீடு வழங்கும் போது
உரிய அளவில் கணக்கீடு
செய்து எந்த சமூகமும்
பாதிக்காத வகையில் சம
உரிமை மற்றும் சமூகநீதியை பெறும் வகையில் அமமுக
சரியான நிலைப்பாட்டை முன்னெடுக்கும்.
- அனைத்து கிராமங்களிலும் அம்மா கிராம வங்கி
துவங்கப்படும். - வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம்
நடைமுறைப்படுத்தப்படும் - விஐபி பாதுகாப்பு பணியில் சாலையோரம் பெண்
காவலர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் - 68 சமூகங்கள் DNT சீர்மரபினர் உரிமை பெற்று தரப்படும்
- நெல்லுக்கான ஆதார
விலையாக ரூ.3000/- மற்றும்,
கரும்புக்கான விலையாக
ரூ.4000/- கிடைக்கவும் உறுதி
செய்வோம் - விவசாயிகளுக்கு வீடு தேடி இடுப்பொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்
- மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும்முறை மீண்டும்
கொண்டு வர நடவடிக்கை.