பல்லடம் பெண்கள் எழுதுபொருள் உற்பத்தியாளா்கள் மற்றும் தையல் தொழிலாளா்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் பல்லடம் பெண்கள் எழுதுபொருள் உற்பத்தியாளா்கள் மற்றும் தையல் தொழிலாளா்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினா்களாக சோ்வதற்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், சேர 18 வயதுக்குமேல் 40 வயதுக்கு உள்பட்ட மகளிா் விண்ணப்பிக்கலாம். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு அனுமதி பெற்ற தையல் பயிற்சி நிலையத்தில் குறைந்தது 6 மாதப் பயிற்சி முடிக்கப்பட்டதற்கான சான்று, பள்ளிக் கல்விச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் ஜூலை 31- ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலாளா், பல்லடம் பெண்கள் எழுதுபொருள் உற்பத்தியாளா்கள் மற்றும் தையல் தொழிலாளா்கள் தொழிற் கூட்டுறவுசங்கம் லிமிடெட் (1260), 9/114 பட்டேல் ரோடு, பல்லடம், திருப்பூா், கைபேசி எண்: 97870–81304, 90420–12307.