இலவச லேப்டாப்
திட்டம் தொடருமா?
பள்ளி
மாணவர்களுக்கு மிதிவண்டி,
புத்தகம், சீருடை, வண்ண
கிரையான், உட்பட 14 வகையான
நலத்திட்ட பொருட்கள் இலவசமாக,
வகுப்புக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.
இதில்,
குறிப்பாக மேல்நிலை வகுப்பு
மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் மேம்படுத்தும் நோக்கில்,
இலவச லேப்டாப் கடந்த,
2011-2012ம் ஆண்டு முதல்
வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு கொரோனா காரணமாக,
நலத்திட்ட பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பினும் புத்தகம், காலணி, மிதிவண்டி
உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்பட்டது.
கோவையில்
கடந்தாண்டு இலவச லேப்டாப்
ஒருவருக்கும் வழங்கப்படவில்லை; நடப்பாண்டிலும் அதற்கான
அறிவிப்புகள் இதுவரை
வெளியிடப்படவில்லை.
கோவை
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க உறுப்பினர் ஒருவர் கூறுகையில், கடந்தாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மிதிவண்டி
வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப்
ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் மிதிவண்டி
உட்பட நலத்திட்ட பொருட்கள்
பெறுவதற்கான பயன்பாட்டு மாணவர்கள்
எண்ணிக்கை பட்டியல் பெறப்பட்டுள்ளது.
ஆனால்,
லேப்டாப் பயனாளர்கள் எண்ணிக்கை
சார்ந்த பட்டியல் இதுவரை
கேட்கவில்லை. இதனால் இத்திட்டம் தொடருமா அல்லது மாற்று
திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என
தெரியவில்லை
என்றார்.
லேப்டாப்
திட்டம் தொடர கல்வியாளர்கள் விருப்பம்ஆன்லைன் கல்வி,
தொழில்நுட்பத்தின் அவசியத்தை
கொரோனா காரணமாக அனைவரும்
புரிந்துள்ளனர். ஆகவே,
இலவச லேப்டாப் திட்டத்தை
தொடர்வதுடன்; கடந்தாண்டுகளை போன்று
தாமதமாக வழங்காமல், ஒன்பதாவது
வகுப்பு முதலே அதை
மாணவர்கள் வகுப்பில் பயன்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான முறையில்
செயல்படுத்த வேண்டும் என
கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.