Homeமுக்கிய தகவல்கள்தெரிந்து கொள்ளுங்கள்தேர்வு அறிவிப்பு வருமுன் ஏன் படிக்கத் தொடங்க வேண்டும்
- Advertisment -

தேர்வு அறிவிப்பு வருமுன் ஏன் படிக்கத் தொடங்க வேண்டும்

👉 தேர்வு அறிவிப்பு வந்த 70 நாட்களுக்குள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். இந்த 70 நாட்கள் தேர்வு பகுதியை முழுமையாக படிக்க போதுமானதாக இருக்காது..

👉 கொடுக்கப்பட்டுள்ள உங்களது தேர்வுக்கான பாட பகுதியை குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது படித்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும்

👉 தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் பயம் பதற்றம் நம்மை தொற்றிக் கொள்ளும்… எப்படி படிக்க வேண்டும் என்பதில் சரியான முடிவினை எடுக்க முடியாது. அதை படிக்கவா இதை படிக்கவா என்ற குழப்பத்தினை உருவாக்கும்..

👉 தேர்வு அறிவிப்பு வரும் முன்னர் நீங்கள் உங்கள் பாடப்பகுதியை ஒருமுறை படித்திருந்தால் தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் ரிவிசன் செய்ய தொடங்கலாம். மேலும் பல மாதிரி வினாக்களை கொண்டு பயிற்சி பெறலாம்.

👉 தேர்வு அறிவிப்பு வருமுன் படிக்கத் தொடங்கினால் கூடுதலாக ஒரு முறை ரிவிசன் செய்யலாம். இதனால் தெரிந்த கேள்விகளுக்கு தவறில்லாமல் பதிலளிக்கலாம்.

👉 இனிவரும் தேர்வுகளுக்கு நிச்சயமாக கட் ஆப் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். ஆதலால் தேர்வு அறிவிப்பு முன்னரே படிக்க தொடங்கினால் மட்டுமே எந்த அளவு கட் ஆப் வைத்தாலும் நீங்கள் தேர்ச்சி பெற முடியும்.

👉 தேர்வு அறிவிப்பு வருமுன் படித்தால் பாடப் புத்தகங்களை நிதானமாக நன்கு படிக்கலாம். . தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் படிக்கத் தொடங்கும் பொழுது ஒன்லைனர் இருக்கிறதா அல்லது அதைவிட குறைவான பக்கங்களை கொண்ட மெட்டீரியல் இருக்கிறதா என தேட தொடங்குவோம். .

ஆதலால் தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்னரே தயாராவது சாலச் சிறந்தது… இப்பொழுது முதலே படிக்க துவங்குங்கள். ..வெற்றியை வசமாக்குங்கள்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -