TRB தேர்வுக்கு வயது நிர்ணயம் நீக்கப்படுமா
TRB
தேர்வுக்கு வயது நிர்ணயத்தை நீக்க வேண்டும் என
கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக
ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை பட்டதாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TRB
தேர்வு ஜூன் 26, 27ல்
ஆன்லைனில் நடக்க உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு நிர்ணயம்
செய்து தேர்வு வாரியம்
அறிவித்து உள்ளது.
ஆயக்குடி
மரத்தடி இலவச பயிற்சி மைய இயக்குனர் கூறியது:
முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு அவ்வப்போது மட்டுமே தேர்வு
நடத்தப்படுகிறது. இதனால்
தேர்வு எழுத ஆயத்தமாகி
வருபவர்கள் பாதிக்கபடுவர்.
பொது
பிரிவுக்கு 40 வயது, இட
ஒதுக்கீட்டு பிரிவுக்கு 45 வயது
என்ற வரம்பால் பலர்
வாய்ப்பை இழக்கும் நிலை
ஏற்படுகிறது. எனவே, TRB
தேர்விற்கு வயது வரம்பு
இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதி
வழங்க வேண்டும்.