குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எப்போது
வெளியீடு?
தமிழக
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்
4 தேர்வுக்கான பாடத்திட்டங்களை விரைவில்
அறிவிக்க வேண்டும் என
தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக
அரசு பணிகளில் காலியாக
உள்ள இடங்களை நிரப்ப
TNPSC சார்பில் குரூப் 1,2, 2a,4 தேர்வுகள்
நடத்தப்படுகிறது. தற்போது
CORONA காரணமாக அரசு
பணிகளில் புதிய பணியிடங்கள் அறிவிக்காமல் ஏற்கனவே
தெரிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதன்படி
2021ம் ஆண்டு ஜனவரி
3ம் தேதி குரூப்
1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த
ஆண்டுக்கான குரூப் 1 பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல்
குரூப் 2 தேர்வில் நேர்முகத்
தேர்வு மற்றும் நேர்முக
தேர்வு இல்லாத பணிகளையும் ஒரே தேர்வாக நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான
பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்
ஜூலை மாதத்தில் குரூப்
2 தேர்வுகளும், குரூப் 4 தேர்வுகள்
செப்டம்பர் மாதத்திலும் நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு இன்னும்
வெளியிடப்படவில்லை என
தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்
குரூப் 4 பாடத்திட்டத்தில் பழைய
பாடத்திட்டம் தொடருமா
இல்லை புது பாடத்திட்டம் கொண்டு வரப்படுமா என
தேர்வர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பாடத்திட்டம் குறித்த தெளிவு நிலை
இருந்தால் மட்டுமே தேர்வில்
சிறந்த முறையில் தேர்வு
எழுத முடியும் எனவே
TNPSC விரைவில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை வெளியிட வேண்டும் என
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.