TAMIL MIXER EDUCATION.ன்
ஆசிரியர் தகுதித் தேர்வு
(TRB) செய்திகள்
ஆசிரியர் தகுதித்
தேர்வு மீண்டும் எப்போது?
– தேர்வு வாரியம்
ஆசிரியர்
தகுதி தேர்வின் முதல்
தாளை ஆகஸ்ட் 25 தேதி
முதல் 31ம் தேதி
வரை நடத்த தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம்
திட்டமிட்டிருந்தது. இந்த
தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து
30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர்
தேர்வு வாரியம் தெரிவித்தது.
ஆனால்
நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர்
தகுதித் தேர்வு நடைபெறும்
தேதி மாற்றப்பட்டது. அதன்படி,
தாள் ஒன்றுக்கான தேர்வு
செப்டம்பர் 10ம் தேதி
முதல் 15ம் தேதி
வரை கம்ப்யூட்டர் மூலம்
நடத்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.
இந்த
நிலையில் ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கான தாள்-1 தேர்வு
நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு
நடக்கும் தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என்றும்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம்
தேர்வர்கள் மத்தியில் விரக்தியை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow