75% PF பணம் எப்போது
எடுக்கலாம்?
அரசு
மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலத்தின் நலனுக்கேற்ப சேர்க்கப்படும் தொகை
தான் PF தொகை.
இது தொழிலாளர்களுக்கு அரசு
வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றாகும்.
இந்த
பணத்தை தொழிலாளர்கள் ஓய்வு
பெற்ற பின்பு பெற்றுக்
கொள்ளலாம். இந்த திட்டத்தை
இந்தியாவில் கடந்த 1952ம்
ஆண்டு துவங்கப்பட்டது. பின்பு
கடந்த 1971ம் ஆண்டு
முதல் ஓய்வூதிய திட்டத்தை
இத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது
ஊழியர்கள் தங்களது PF
தொகையில் இருந்து 75% தொகையை
எப்போது பெறலாம்? எப்படி
பெறலாம்? என்ற வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
ஒரு
ஊழியர் வேலையில்லாமல் இருந்தால்
அல்லது ஓய்வு பெற்றால்
தனது PF தொகையை
திரும்ப பெறலாம். மேலும்
ஊழியர்கள் வேலையில்லாமல் இருக்கும்
பொழுது தங்களது PF
தொகையில் இருந்து 75% தொகையை
முதலில் பெற்றுக் கொள்ளலாம்.
மீதமுள்ள
25% தொகையை அவர் பணியின்மைக்கு இரண்டு மாத காலத்திற்கு பின்பு தான் பெற
முடியும். இதனை ஆன்லைன்
மூலம் திரும்ப பெற
வேண்டும் என்றால் முதலில்
ஆதாருடன் UAN இணைக்கப்பட வேண்டும்.
பின்பு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
என்னும்
தளத்திற்கு சென்று UAN மற்றும்
அதனுடைய கடவுச்சொல்லை பதிவு
செய்ய வேண்டும்.
அதில்
Claim என்னும் ஆப்ஷனை Click
செய்து தங்களது வங்கி
கணக்கின் கடைசி நான்கு
நம்பரை பதிவு செய்ய
வேண்டும்.
பின்பு
‘Proceed for Online Claim’ என்னும் ஆப்ஷனை
கிளிக் செய்து PF
அட்வான்ஸ் என்னும் மெனுவை
தேர்ந்தெடுக்கவும்.
அந்த
மெனுவில் தொகை பெறுவதற்கான நோக்கத்தை பதிவு செய்து
தேவையான தொகையை பதிவிட
வேண்டும்.
பின்பு
அதில் உள்ள Get Aadhaar OTP என்னும்
ஆப்ஷனை கிளிக் செய்தால்
ஆதரவுடன் இணைக்கப்பட்ட பதிவு
செய்யப்பட்ட நம்பருக்கு ஓர்
OTP வரும்.
அதனை
பதிவு செய்தால் உங்கள்
கோரிக்கை சமர்ப்பிக்கப்படும்.