இந்த சேவைக்காகவே பிரத்தியேகமான டிஜிலாக்கர் இணையதளமும், Digilocker ஆப்ஸ் கூட உருவாக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆதார் அடையாள அட்டை இருப்பவர்கள் அனைவரும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்போது இந்த சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp மூலம் ஆதார், PAN டவுன்லோடு செய்வது எப்படி?
- முதலில் +91-9013151515 என்ற எண்ணை MyGov Helpdesk என்ற பெயரில் உங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர், உங்கள் WhatsApp-ற்கு சென்று வாட்ஸ்அப் காண்டாக்ட்டை ரெப்ரெஷ் செய்து கொள்ளுங்கள்.
- பின்பு அதில் MyGov Helpdeskயை தேடி எடுத்து, ஓபன் செய்துகொள்ளவும்.
- MyGov Helpdesk சாட்டில் Namaste அல்லது Hi என்று டைப் செய்து அனுப்பவும்.
- அதில் Digilocker சேவையா அல்லது கோவின் சேவையா என்று தேர்வு செய்யுமாறு உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.
- அதில் Digilocker சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் உங்களிடம் ஏற்கெனவே டிஜிலாக்கர் கணக்கு உள்ளதா என்று கேட்கப்படும்.
- அதில் ஆம், இல்லை என்று இரண்டு தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யவும்.
- உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு இருந்தால், ஆம் என்று தேர்வு செய்ய வேண்டும்.
- உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு இல்லை என்றால், முதலில் இணையதளத்திற்கு அல்லது ஆப்ஸ் மூலம் ஒரு புதிய கணக்கை உருவாக்க வேண்டும். பிறகு, மீண்டும் செயல்முறையைப் பின்பற்றி, ஆம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர், உங்கள் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை அனுப்ப வேண்டும். இப்படிச் செய்வதால் உங்கள் Digilocker சேவை வாட்ஸ்அப் சாட் பாட்டுடன் இணைக்கப்படும்.
- பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதைச் WhatsApp சாட்டில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து உங்கள் டிஜிலாக்கரில் இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் வரிசையாகக் காட்டப்படும்.
- அதில் உங்களுக்குத் தேவையான ஆவணத்திற்கு நேராக இருக்கும் எண்ணை டைப் செய்து அனுப்பினால் அந்த ஆவணம் pdf வடிவில் உங்களுக்கு அனுப்பப்படும்.
- அதனை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் அல்லது WhatsApp சாட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒரு நேரத்தில் ஒரு ஆவணம் மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மேலும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஆவணம் உங்கள் டிஜி லாக்கர் கணக்கில் முன்னரே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இணையதளத்திற்குச் சென்று முதலில் அதனை உங்கள் டிஜிலாக்கர் கணக்கில் இணைத்து விட்டு பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.