உங்கள் சொத்து ஆவணங்கள் தொலைந்தால் என்ன
செய்ய
வேண்டும்?
சொத்து ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது
அவசியமாகும்
பரிவர்த்தனை
தொடர்பான
ஆவணங்கள்
ஒரு
வேளை
தொலைந்து
போனால்
நிஜ
ஆவணங்களை
நம்மால்
பெற
முடியாது.
சொத்து வாங்கியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை உண்மை ஆவணங்களை வாங்கி பத்திரப்படுத்தி
வைத்துக்
கொள்ள
வேண்டும்.
இந்த சொத்து ஆவணங்களை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக தொலைக்க நேரிட்டாலோ , காணாமல் போனாலோ என்ன செய்ய வேண்டும்???
முதல் வேளையாக சொத்து பத்திரமோ, ஆவணங்களோ தொலைந்து போனது பற்றி காவல்நிலையத்தில்
புகார்
அளிக்க
வேண்டும்
பின்னர்
முதல்
தகவல்
அறிக்கையை
பதிவு
செய்ய
வேண்டும்.
இதன்
நகலை
நாம்
வாங்கி
வைத்துக்கொள்ள
வேண்டும்.
இது பற்றிய செய்தியை செய்தித்தாளில்
விளம்பரபக்கத்தில்
தொலைந்து
போனதாக
அறிவிக்க
வேண்டும்.
அது
மாநில
மொழியாகவோ
அல்லது
ஆங்கில
மொழி
செய்தித்தாளிலோ
வெளியிட்டுக்
கொள்ளலாம்.
அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது ஆவணங்கள் தொலைந்து போனது தொடர்பாக யாரை அணுக வேண்டும் என்ற குறிப்பில் சம்மந்தப்பட்ட
நபரின்
பெயரையும்,
சொத்து
விவரத்தையும்
வெளியிட்டிருக்க
வேண்டும்.
குடியிருப்பு
சொசைட்டியிடம்
சான்றிதழை
மீண்டும்
அளிக்க
வேண்டும்
என
விண்ணப்பம்
அளிக்க
வேண்டும்.
அத்துடன்
முதல்
தகவல்
அறிக்கையையும்
, செய்தித்தாளில்
வெளியிடப்பட்ட
நோட்டீசையும்
உடன்
இணைத்திருக்க
வேண்டும்.
இதைப்பற்றி
கட்டாயம்
பதிவு
செய்திருக்க
வேண்டும்.
அடுத்தகட்டமாக
பத்திர
பேப்பரில்
ஆவணங்கள்
தொலைந்து
போனது
பற்றி
பதிவு
செய்ய
வேண்டும்.
உரிய
தகவல்களுடன்
, முதல்
தகவல்
அறிக்கை
நகல்,
செய்தித்தாள்
நோட்டீஸ்
ஆகியவற்றை
இணைத்திருக்க
வேண்டும்.
இவை
அணைத்தையும்
பதிவாளர்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.
இந்த ஆவணங்கள் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். நோட்டரி மூலம் அட்டெஸ்டட் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமர்ப்பிக்கப்பட்டதற்கான
நகலை
நீங்கள்
பெற்றுக்
கொள்ள
வேண்டும்.
சொத்து ஆவணங்கள் வங்கியில் வைக்கப்பட்டு
அவை
கிடைக்கப்பெறவில்லை
என்றால்
நகல்
பத்திரத்தின்
இழப்பிற்கு
வங்கி
பொறுப்பாகும்.
ஒரு
சில
சமயுகளில்
சில
நகரங்களில்
ஆன்லைன்
எப்.ஐ.ஆர். உள்ளது.
அதை சரிபார்த்து ஆன்லைனில் புகார் கொடுக்கலாம். இழந்த சொத்து தொடர்பான எப்.ஐ.ஆர். சொத்தின் உரிமையாளரால்
மட்டுமே
பதிவு
செய்ய
முடியும்.