வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அறிய
இணையதளம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞா்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
மூலம் வழிகாட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா்
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:– தமிழ்நாடு
அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் திறன்
மேம்பாட்டு துறை மூலம்
வேலை தேடும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நிறுவனமானது திறன்படைத்த இளைஞா்களை உருவாக்குதல், ஆங்கிலத்தில் பேசுதல்,
எழுதுதல், படித்தல், கவனித்தல்
போன்ற திறன்களை வளா்த்தல்
ஆகிய பணிகளில் ஈடுபட்டுவருகிறது. ஆகவே நிறுவனம்
மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான
கல்வித்தகுதி உள்ளிட்ட
விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.
நிறுவன
செயல்பாடுகளின் முழு
விவரங்களை ராமநாதபுரம் டி.பிளாக்கில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது
தொலைபேசியிலோ (தொலைபேசி
எண்: 04567-230160) அறிந்து
கொள்ளலாம்.