HomeBlogEPFO வட்டியில்லா கடன் பெற வழிமுறைகள்
- Advertisment -

EPFO வட்டியில்லா கடன் பெற வழிமுறைகள்

 

Ways to Get an EPFO Interest Free Loan

EPFO வட்டியில்லா கடன்
பெற
வழிமுறைகள்

சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு
கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம்
லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக்
கொள்ளலாம். இதற்கு தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதியின்
அடிப்படையில் கடன்
தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த
கடன் தொகைகளை செலுத்த
வேண்டிய அவசியமும் இல்லை.
ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால
வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள்
திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும்
உண்டு.

அதன்படி
கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கு வைப்பு நிதி
தொகையில் இருந்து 50% எடுத்துக்
கொள்ளலாம். அதற்காக அந்த
பணியாளர் 7 வருடம் வரை
பணியில் இருக்க வேண்டும்.
திருமண விசேஷங்களுக்காக கடன்
தேவை என்றால் அந்த
ஊழியரின் வைப்பு நிதியிலிருந்து 50% வரை எடுத்துக் கொள்ளப்படும். அதற்காக அந்த ஊழியர்
7
வருடம் வரை பணியில்
இருக்க வேண்டும். இதேபோல
புது வீடு வாங்குவதற்கும், மருத்துவ செலவுகளுக்கும் பல்வேறு
நிபந்தனைகளுடன் கடன்
தொகை வழங்கப்படுகிறது.

EPF
கடன் பெற
வழிமுறைகள்:

  • EPFO போர்டலில் UAN மற்றும்
    Password
    பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
  • அதில் Online பகுதிக்கு
    சென்று Claim என்பதை Click
    செய்யவும்.
  • பிறகு புதிய
    பக்கம் ஒன்று திறக்கும்,
    அதில் பெயர், பிறந்த
    தேதி, தந்தை பெயர்,
    பான் எண், ஆதார்
    எண், தொலைபேசி எண்
    போன்றவை கேட்கப்பட்டிருக்கும்.
  • அவற்றை சரி
    பார்த்த பிறகு Online Claim
    Proceed
    என்பதை Click செய்யவும்.
  • அதற்கு கீழ்
    ஒரு menu தோன்றும்.
  • அதில் PF ADVANCE ல்
    FORM 31
    தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு கடன்
    வாங்க விரும்பும் காரணத்தை
    தேர்வு செய்யவும்.
  • உங்களுக்கு தேவையான
    கடன் தொகையை குறிப்பிடவும்.
  • பிறகு சரியான
    முகவரியை குறிப்பிடவும்.
  • பிறகு அதில்
    கையொப்பமிட்டு Get Aadhaar OTP என்பதை
    தேர்வு செய்யவும்.
  • உங்களுக்கு கொடுக்கப்படும் OTP எண்ணை பதிவு செய்யவும்.
  • பிறகு Validate OTP and
    Submit Claim Form
    என்பதை கிளிக் செய்யவும்.
  • இதன் பிறகு
    உங்களுக்கு கடன் வழங்கும்
    செயல்முறை துவங்கும்.

UMANG APP மூலம்
விண்ணப்பிக்க

  • UMANG
    App

    Home
    பக்கத்தில் EPFO என்பதை Click
    செய்யவும்.
  • அதில் Employee Centric
    Services
    என்ற ஆப்சனில் Raise Claim என்பதை
    Click செய்யவும்.
  • பிறகு உங்கள்
    UAN
    மற்றும் OTP எண்ணை கொடுத்து
    login செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -