தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில், தற்போது அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தகுதிகள்:
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பொறியியல் மற்றும் மேலாண்மை (Engineering and Management) அறி முறை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Pure Science and Applied Science) வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Agricultural Science and Medicine) சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி (International Commerce Economic, Accounting, Finance) மனித நேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் (Humanities, Social Science, Fine Arts, Law and Arts and Science ) போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புபவராக இருக்க வேண்டும்.
- குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம்.
- மேற்கண்ட பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு அலுவலகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
- தாட்கோ, #31, செனோடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலலாம். மின்னஞ்சல் முகவர் tahdcoheadoffice@gmail.com, தொலைபேசி எண்: 91 44 24310221 ஆகும்.
எனவே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவர்கள் இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.