HomeBlogடாடா குழும ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
- Advertisment -

டாடா குழும ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

 

Wage hike for Tata Group employees

டாடா குழும
ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு

கடந்த
ஆண்டு இந்தியாவில் பரவிய
கொரோனா நோய்த்தொற்று காரணமாக
டாடா குழும நிறுவனங்களின் வருவாயானது பாதிக்கப்பட்டது. இதன்
காரணமாக அந்நிறுவனம் மூத்த
அதிகாரிகளுக்கு 20% ஊதியத்தினை குறைத்தது. இதனால் ஊழியர்கள்
சற்று வருத்தத்தில் இருந்தனர்.
மேலும் டாடாவின் பல
நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டது.

தற்போது
டாடா நிறுவனம் சரிந்த
பொருளாதாரத்தில் இருந்து
சற்று மீண்டு வந்துள்ளது. இதனால் அதன் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று
கொண்டு இருக்கிறது. இதனால்
ஊழியர்களுக்கு ஊதியத்தினை உயர்த்தி வழங்க முடிவு
செய்துள்ளது.

மார்ச்
மாத இறுதியில் இருந்து
உயர்த்தப்பட்ட ஊதியம்
வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வழக்கமாக 6-8% ஆக
உயர்த்தப்படும் ஊதியமானது,
இம்முறை 12-14% வரை உயர்த்தப்படுகிறது. அதனோடு ஊழியர்களுக்கான பதவி உயர்வும் அளிக்கப்பட உள்ளது.

கொரோனா
தொற்றிற்கு பிறகு நாட்டில்
சுற்றுலாத் துறையானது இன்னும்
மீண்டு வரவில்லை. அதற்கான
வருவாய் குறைந்துள்ள நிலையில்
ஆகும் செலவினங்கள் மட்டும்
அதிகரித்துள்ளது. இதனால்
டாடா குழுமத்தின் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும்
ஊதியம் உயர்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -