வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி
மதுரை
கே.புதுார் அரசு
ஐ.டி.ஐ.,யில்
பிரதமர் கவுசல் விகாஸ்
யோஜ்னா திட்டத்தின் கீழ்
வேலைவாய்ப்புடன் கூடிய
மாலை நேர குறுகிய
கால தொழிற்பயிற்சிகள் ஜன.,
20 முதல் வழங்கப்படவுள்ளன.
ஆட்டோ
சர்வீஸ் டெக்னிசீயன், டாக்ஸி
டிரைவர், காஸ்வெல்டர், மிஷின்
ஆப்பரேட்டர், புரோக்கிராமர் போன்ற
பயிற்சிகள் தினமும் நான்கு
மணி நேரம் வழங்கப்படவுள்ளன.
பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு (டாக்ஸி டிரைவருக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் பயிற்சி துவங்கும் நாளில் விண்ணப்பம் பெற்று சேரலாம்.
தொடர்புக்கு: 0452-2903020