தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வரும், 11ல், பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதம மந்திரி தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்க உள்ளன.தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோர், தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் ‘நாக்’ சான்றிதழ் பெறலாம்.
இச்சான்றிதழ் பெற்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சுயமாக தொழில் கடனுதவி கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு, ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow