TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
மீன்வளத்துறையில் இளநிலை
பொறியாளர் தெரிவு
தொடர்பான மூன்றாம் கட்ட
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு – TNPSC
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய
பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 05.032021 நாளிட்ட
அறிவிக்கை எண்: 062021- ன் வாயிலாக
விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.
இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த
18.092021 மு.ப மற்றும் பிப.
அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற
மதிப்பெண் விவரங்கள் 15:022022 அன்று
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர் தெரிவு
தொடர்பான மூன்றாம் கட்ட
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-500 003, தேர்வாணைய
சாலையில் (ரிராட்வே
பேருந்து நிலையம் மற்றும். கோட்டை
ரயில் நிலையம் அருகில்) உள்ள
தேர்வாணைய அலுவலகத்தில் 05.09.2022 அன்று
நடைபெற உள்ளது.
மேற்படி
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் /ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய
அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான
https://www.tnpsc.gov.in/ லிருந்து
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம்: SMS மற்றும் E-mail மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள். எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற
மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு. அனுமதிக்கப்படுவர்.
எனவே,
அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி
நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி
அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow