கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில், முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பாா் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நுாடுல்ஸ், சூப் மிக்ஸ், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிரியாணி மிக்ஸ் தொழில் நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்படும். மேலும், தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
ஆா்வமுள்ளவா்கள் ரூ.1,770 பயிற்சிக் கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை 94885–18268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.