சத்துணவுத் துறையில்
காலிப்பணியிடங்கள் & ஓய்வூதியமும் – சங்க கூட்டத்தில்
தீர்மானம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக
கூட்டரங்கில், சத்துணவு
ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
நடைபெற்றது.
இந்த
கூட்டத்தில் மாவட்ட துணைத்
தலைவர் பெரியசாமி, மாவட்டச்
செயலாளர் கொளஞ்சி ஆகியோர்
பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்க செயல்பாடுகள், பணிகள், பணியாளரின் நிலைமை,
பள்ளிகள் செயல்படும் முறை
உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து
விவாதிக்கப்பட்டது.
மேலும்
சத்துணவுத் துறையில் காலியாக
உள்ள பணியிடங்களை விரைந்து
நிரப்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் சத்துணவு
பணியாளர்களான, சத்துணவு
அமைப்பாளர், உதவியாளர், சமையலர்
போன்றவர்களுக்கு காலமுறை
ஊதியம் வழங்கவேண்டும்.
மேலும்
அவர்களின் குடும்ப நலனை
கருத்தில் கொண்டு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட
தீர்மானங்களை நிறைவேற்றினர்.