பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு அனுபவம் எதுவும் தேவையில்லை. 2024ம் ஆண்டு படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் உள்பட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி (Post Graduate Engineer Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்னர். இந்த பணிக்கு எம்இ, எம்டெக் படிப்பை கன்ட்ரோல் சிஸ்டம், இசிஇ, ட்ரிபிள் இ (EEE), பவர் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தார்கள் இந்த படிப்பை 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் தேவையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஆனாலும் கூட விண்ணப்பத்தாரர்கள் தங்களின் கல்லூரி, பல்கலைக்கழக படிப்பை 65 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அதோபோல் ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாத (அதாவது ஓராண்டு) அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்சிஎல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் சென்னையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதுவிர பெங்களூர், நொய்டா, புனே, குர்கிராம் உள்ளிட்ட இடங்களிலும் பணியமர்த்தப்படுவர்கள்.இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பள விபரம் பின்னர் அறிவிக்கப்படும். திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்