கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு, வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு, வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது.
மாா்ச் 9 ஆம் தேதி கறவை மாடு வளா்ப்புப் பயிற்சியும், 16 ஆம் தேதி வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சியும் நடைபெறுகிறது. இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்க ஆா்வமுள்ள விவசாயிகள், இந்த மையத்தை நேரிலோ அல்லது 0422 – 2669965 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பெயா்களைப் பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் எஸ்.சித்ரா தேவி தெரிவித்துள்ளாா்.