கர்ப்பிணிகளுக்கு அவரச
Whatsapp உதவி
எண் – தேசிய பெண்கள்
ஆணையம்
நாடு
முழுவதும் CORONA பரவல்
காரணமாக தொற்று எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது.
இதனால்
மத்திய, மாநில அரசுகள்
தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதுமான
படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் படுக்கும் அவல
நிலை ஏற்படுகிறது. CORONA வைரஸ் பரவியதில் இருந்தே
மருத்துவமனைகளில் மற்ற
நோய்களுக்கு சிகிக்சை அளிப்பதில்லை.
அதே
போல் கர்பிணிகளையும் சில
தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. இதனால் கர்ப்பிணிகளுக்கு உரிய
நேரத்தில் சிகிக்சை அளிக்க
முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது நாடு முழுவதும்
இரவு நேர மற்றும்
வார இறுதி ஊரடங்குகள் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு அவசரமான
நேரங்களில் போக்குவரத்து சேவைகள்
கிடைப்பதில்லை. இதனை
கருத்திற்கொண்டு இந்திய
தேசிய பெண்கள் ஆணையம்
கர்ப்பிணிகளுக்கு என
அவசர உதவி வாட்ஸ்
ஆப் எண்ணை 9354954224 மேலும்
helpatnew@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்
எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் பெண்கள்
ஆணையம் தெரிவித்துள்ளது.