UPSC சிவில் சர்வீஸ்
முதல்நிலைத்தேர்வு அக்டோபர்
10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நாடு
முழுவதும் பெருகி வரும்
கொரோனா நோய் பரவல்
காரணமாக அரசு பணியாளர்
தேர்வுகள் துவங்கி பள்ளி
தேர்வுகள், ஜேஇஇ போன்ற
பல நுழைவுத்தேர்வுகளும் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில்
சர்வீஸ் தேர்வுகளும் தற்போது
ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது IAS, IPS, IFS, IRS
போன்ற உயர் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய
அரசால் சிவில் சர்வீஸ்
தேர்வுகள் (UPSC) நடத்தப்பட்டு வருகிறது.
இந்த
பதவிக்காக போட்டியிடுபவர்களுக்கு முதல்
நிலைத்தேர்வு, முதன்மைத்
தேர்வு, நேர்முகத் தேர்வு
போன்ற 3 நிலைகளில் தேர்வுகள்
நடத்தப்படுகிறது. அதன்
படி இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணிகளில்
காலியாக இருந்த 712 இடங்களை
நிரப்புவதற்கு, கடந்த
ஜனவரி 21ஆம் தேதி
UPSC ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, சிவில் சர்வீஸில்
காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் முதல் நிலைத்தேர்வு ஜுன்
27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா
இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து சிவில்
சர்வீஸ், முதல் நிலைத்தேர்வை ஒத்தி வைக்குமாறு பல
தரப்பினரிடையே இருந்து
கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இது குறித்து UPSC சார்பில்
தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 27 ஆம் தேதி
நடத்தப்பட இருந்த சிவில்
சர்வீஸ் முதல் நிலைத்தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.