பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினrரின் ஆதரவையும், பாதுகாப்பையும் பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
அத்தகைய திட்டங்களில் ஒன்று (பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) ஆகும்.. இத்திட்டம் தொழிலாளர்களின் வயதான காலத்தில் ஓய்வூதிய பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15,000 ரூபாய்க்குக் குறைவான மாத வருமானம் உள்ள, தையல்காரர்கள், செருப்புத் தொழிலாளிகள், ரிக்ஷாக்காரர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் போன்ற அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.. மேலும் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் அவர்கள் வைத்திருக்க வேண்டும். இருப்பினும், வருமான வரி செலுத்தும் நபர்கள், EPFO, NPS மற்றும் NSIC இன் சந்தாதாரர்கள் இந்த திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது. ஓய்வூதியத் தொகையானது தொழிலாளர்களின் பங்களிப்பின் அடிப்படையில் மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும். மொத்த ஓய்வூதியத் தொகையில் 50 சதவீதத்தை அரசு வழங்குகிறது.
ஓய்வூதியதாரர் இறந்தால், ஓய்வூதியத் தொகை, அவரின் வாழ்க்கைத் துணைக்கு அனுப்பப்படும். இத்திட்டம் ஆண்டு ஓய்வூதியமாக ரூ.36,000 வழங்குகிறது. திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறையானது அதிகாரப்பூர்வ இணையதளமான www.maandhan.in மூலம் ஆன்லைனில் கிடைக்கிறது.. மேலும் பொது சேவை மையம் மூலம் ஆஃப்லைனிலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, செயல்முறையை முடிக்க அவர்களின் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.. மேலும், அவர்களின் அன்றாட தேவைகளை ஆதரிக்க நிலையான வருமான ஆதாரத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், தொழிலாளர்கள் தங்கள் பிற்காலத்தில் சிரமப்படாமல் இருக்கவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவுகிறது.